‘தகாத’ உறவுக்கு இடையூறு.. ஆண் நண்பருடன் சேர்ந்து ‘தாய்’ செய்த ‘கொடூரம்’... 3 வயது பெண் ‘குழந்தைக்கு’ நேர்ந்த ‘பயங்கரம்’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 21, 2020 08:44 AM

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தைக்கு தாயே மதுவைக் கொடுத்து, அடித்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hosur Mother Lover Feed Alcohol To 3 YO Girl Baby Face Inquiry

ஓசூரை அடுத்த பாகலூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 3 வயது மகள் நயனாஸ்ரீயுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அசோகன் என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தனிமையில் இருந்த நந்தினியை அசோகன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கியுள்ளார். சம்பவத்தன்று அசோகனுடன் வீட்டில் மது அருந்திய நந்தினிக்கு தங்கள் உறவுக்கு இடையூறாக இருக்கும் மகள் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆத்திரத்தில் 3 வயது மகளுக்கு கட்டாயமாக மதுவைக் கொடுத்த அவர் குழந்தையை அடித்துக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு பாகலூர் சுகாதார மையத்தில் சேர்த்துவிட்டு, போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு குழந்தை நயனாஸ்ரீ ரத்த வாந்தி எடுத்ததால், மேல்சிகிச்சைக்காக ஒசூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து நந்தினி, அசோகன் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CRIME #MOTHER #GIRL #BABY #AFFAIR #ALCOHOL #LOVER