ஒரு வாரமாக ‘வீட்டிலேயே’ இருந்த ‘இன்ஜினியரிங்’ மாணவி... ‘பெற்றோருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’... ‘சோகத்தை’ ஏற்படுத்திய சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 26, 2020 05:45 PM

புதுச்சேரியில் கல்வி கட்டணம் செலுத்தாததால் இன்ஜினியரிங் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Puducherry Girl Student Commits Suicide Over College Fees Issue

புதுவை ரெட்டியார்பாளையம் 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவருடைய மகள் தேவிஸ்ரீ (21). இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் பி.டெக் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்தாததால் தேவிஸ்ரீ கடந்த ஒரு வாரமாக வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதையடுத்து கல்வி கட்டணம் செலுத்தாததால் மனமுடைந்திருந்த தேவிஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் இரவில் வீடு திரும்பிய சவுந்தர்ராஜனும், அவருடைய மனைவியும் மகள் தூக்கில் சடலமாகத் தொங்குவதைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தேவிஸ்ரீயை உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #COLLEGESTUDENT #PUDUCHERRY #GIRL #COLLEGE #FEES