‘வேலை கிடைக்காத விரக்தி’.. ‘ஒரு மாசமா யூடியூப் பாத்து செஞ்ச வெடிகுண்டு’.. கைதான இன்ஜினீயரின் பரபரப்பு வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 27, 2020 12:57 PM

வேலை கிடைக்காத விரக்தியில் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததாகவும், அதை யூடியூப்பில் பார்த்து தயாரித்ததாகவும் கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Mangaluru Man who made the bomb by watching Youtube

கர்நாடகா மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் கடந்த திங்கள் கிழமை டிக்கெட் கவுன்டர் அருகே கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. இதனை போலீசார் சோதனை செய்ததில் பைக்குள் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே வெடிகுண்டு நிபுணர்கள் வரழைக்கப்பட்டு பை பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் செஞ்சாரி மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்களால் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது.

இதனை அடுத்து வெடிகுண்டு வைத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த நபர் விமான நிலையத்தில் பை ஒன்றை வைத்து சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக கடந்த புதன்கிழமை ஆதித்யா ராவ் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனை அடுத்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

அதில், பொறியியல் பட்டதாரியான ஆதித்யா ராவ் மங்களூரு விமான நிலையத்தில் காவலர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் போதிய ஆவணங்கள் இல்லாததால் அவருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த அவர் விமான நிலையத்துக்கு குண்டு வைக்க முடிவெடித்துள்ளார். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு யூடியூப்பில் வெடிகுண்டு செய்வது குறித்து தெரிந்துகொண்டு, வெடி பொருள்கள் வாங்கி குண்டு தயாரித்ததாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

News Credits: Vikatan

Tags : #CRIME #POLICE #KARNATAKA #YOUTUBE #MANGALURU