VIDEO: ‘தாயை கழிவறையில் தங்கவைத்த வளர்ப்பு மகன்’.. ‘கடுங்குளிரில்’ சுருண்டு கிடந்த கொடுமை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வளர்ப்பு தாயை கழிவறையில் தங்கவைத்து கொடுமைப்படுத்திய மகனையும், மருமகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிகோலஸ். இவரின் பராமரிப்பில் தனது தாயின் சகோதரியும், வளர்ப்புத் தாயுமான மரிய மிக்கேல் (92) இருந்தார். இந்த நிலையில் மூதாட்டி மரிய மிக்கேலை சரியாக பராமரிக்காமல் கழிவறையில் தங்கவைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் சமூக நலத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.
அங்கு வீட்டின் அருகே உள்ள கழிவறையில் மூதாட்டி மரிய மிக்கேல் குளிரில் நடுங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவரை அங்கிருந்து மீட்டு கருணை இல்லத்தில் அனுமதித்துள்ளனர். பின்னர் சமூக நலத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், மூதாட்டியை சரியாக பராமரிக்காத நிகோலஸ் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
