VIDEO: முதியோர் இல்லத்தில் சங்கிலியால் கட்டிவைத்து கொடுமை.. அதிர்ச்சி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத் முதியோர் இல்லத்தில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சங்கிலியால் கட்டிவைத்து துன்புறுத்தப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதன் அடிப்படையில் முதியோர் இல்லத்துக்கு போலீசார் சோதனைக்காக சென்றுள்ளனர். அப்போது ஒரு அறையில் 73 பேர் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அவர்களை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் முதியோர் இல்ல நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முதியோர் இல்லத்தின் ஒரு அறையில் 73 பேர் அடைக்கப்பட்டிருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : #POLICE #TELANGANA
