“என்ன ஒரு ஆனந்தம்!”.. “பைக் ஓட்டும்போது செய்ற வேலையா இது?”.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Jan 26, 2020 05:33 PM

தெற்கு வியட்நாமில் Huynh Thanh Khanh என்கிற 23 வயது நபரும் அவரது நண்பரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது செய்த சேட்டை உலகம் முழுவதும் வீடியோவாக பரவி வைரலாகி வருகிறது.

vietnam men bathing while riding in bike video viral

அப்பகுதியில் உள்ள Binh Duong என்கிற இடத்தில் உள்ள Dau Tieng மாவட்டத்தில் Khanh என்பவர் தனது நண்பரை தனது பைக்கின் பின்புறம் உட்கார வைத்துக்கொண்டு பைக் ஓட்டியுள்ளார். இருவரும் அரை நிர்வாணமாக இருந்ததோடு, இருவரும் அந்த பைக்கில் செல்லும்போது சோப்பு போட்டு குளித்துக்கொண்டு சென்றுள்ளனர். பைக் ஓட்டுபவரும், அந்த பைக்கின் பின்னால் இருப்பவர், ஆளுக்கொரு பக்கெட் தண்ணீரை மடியில் ஒரு  வைத்துக்கொண்டு, தத்தம் தலைகளில் தண்ணீர் ஊற்றி, தலையில் சோப்பு போட்டுக்கொள்கின்றனர்.

பின்னால் இருப்பவரும், பைக்கை டிரைவ் செய்தவரின் தலையிலும் தண்ணீர் ஊற்றி,

தனக்கும் சோப்பு போட்டு தண்ணீர் ஊற்றிக்கொள்கிறார். அந்த பைக் நம்பரை வைத்து அவர்களை பிடித்த போலீஸார் இருவருக்கும் அபராதம் விதித்ததோடு, பொது இடத்தில் இப்படி விதிகளுக்கு புறம்பாக பைக் ஓட்டிச் சென்றதற்காக, பைக்கிற்கும் தனியே அபராதம் விதித்தனர்.

Tags : #VIDEOVIRAL #POLICE #BIKE