“50 வருஷம் ஆயிடுச்சு”.. “ஆனாலும் லவ் ஜோடிதான்!”.. “இளசுகளுக்கு டஃப் கொடுக்கும் திருமண ஆல்பம்!”.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாசந்தோஷத்தை கொண்டாட வயது ஒரு தடை இல்லை என்பதை, 50வது ஆண்டு திருமண ஆல்பம் பாடலில் நடித்து வீடியோவாக வெளியிட்டுள்ள தம்பதியினர் உணர்த்தியுள்ளனர்.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ளது குண்டப்புரா. இப்பகுதியில் உள்ளது கேங்கோலி என்கிற பகுதி. இப்பகுதியில்தான் மணமாகி 50 வருடங்களைக் கடந்து வாழ்ந்துவரும் சுதானந்த ஷெனாய் மற்றும் உமா ஷெனாய் என்கிற தம்பதியினர் தற்போது தங்களது 50வது ஆண்டு திருமண ஃபோட்டோ மற்றும் வீடியோ ஷூட்டில் நடித்துள்ளனர்.
இவர்களின் திருமண வீடியோ ஆல்பம் பாடலில், இந்த தம்பதியர்கள் இந்த வயதில் இளம் ஜோடிகள் போல ஆடிப்பாடி, அன்பைப் பரிமாறிக்கொள்கின்றனர். இவர்களின் 50-வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு வெளியான இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. 1970ல் திருமணம் செய்துகொண்ட இவர்கள்
தற்போது இவர்களின் பொன்விழா மண ஆண்டை கொண்டாடியுள்ளனர். அதற்கென இருவரையும் ஆல்பம் ஷூட்டில் நடிக்கவைத்து, பார்த்து பார்த்து காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
