“கணவரைக் காணும்ங்க!”.. “புகார் அளிக்க வந்த பெண்ணுடன் தலைமைக் காவலர் செய்த காரியம்!”.. “கையும் களவுமாக பிடித்த கணவரின் அண்ணன்!”
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி அருகே உள்ள புலிவலம் பகுதியை சேர்ந்த சிராஜூ நிஷா என்பவரின் தம்பி முஹம்மது ஜக்கரிய்யா 7 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய மனைவியை கைவிட்டுவிட்டு, வேறு ஒரு பெண்ணுடன் அவர் தலைமறைவாகியதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். ஆனால் காதல் திருமணம் என்பதால் தம்பியின் மனைவியிடம் சிராஜூ நிஷா எந்த பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படும் நிலையில் தம்பியை காணவில்லை என்று அவரும், கணவரை காணவில்லை என்று அப்பெண்ணும் தனித்தனியே புலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இவர்கள் இருவரும் கொடுத்த புகாரின் பெயரில் இருவரின் இந்த குடும்ப பஞ்சாயத்தினை, புலிவலம் காவல் நிலைய தலைமைக் காவலர் ராமர் விசாரித்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் கணவரைப் பிரிந்த அந்தப் பெண்ணை தலைமை காவலர் ராமர் தன்வசப்படுத்த நினைத்ததை சிராஜூ நிஷா அறிந்துள்ளார்.
இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு அப்பெண்ணின் வீட்டுவாசலில் ராமரின் இருசக்கர வாகனம் நிற்பதைப் பார்த்த சிராஜூ நிஷா உடனடியாக சென்று வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். உறவினர்கள் முன்னிலையில் கதவைத்திறந்த ராமர் கையும் களவுமாக பிடிபட்டார். புகார் அளிக்க வந்த பெண்ணிடம், பேசி மயக்கி அப்பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த ராமர் பற்றி ஊர் மக்கள் அளித்த புகாரின் பேரில், தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ராமரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
