“நெஞ்சுல நேர்மையும் .. செயல்ல நியாயமும்” .. “நாங்க INCOME TAX ஆபீஸர்ஸ்”.. கடைசில் நடந்த “வேறலெவல் ட்விஸ்ட்”!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெங்களூரில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு வெள்ளைப்பூண்டு மூட்டைகளை ஏற்றிவந்த சரக்கு வாகனத்தை, திருநெல்வேலியைச் சேர்ந்த ஓட்டுநர் செல்வம் ஓட்டிவந்து பெரியகுளத்தில் இறக்கிவிட்டு 8, 50,000 ரூபாய் பணத்துடன்,

பெங்களூரு புறப்பட்டுள்ளார். இதையறிந்த 3 பேர், அவரை பின் தொடர்ந்துள்ளனர். எண்டப்புளி என்கிற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் செல்வத்தின் லாரியை மடக்கி, தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு வண்டியை சோதனை செய்துள்ளனர். ஆனால் செல்வமோ, தான் டிரைவர்தான் என்றும் முதலாளியிடம் பேசிக்கொள்ளுமாறும் கூற, அவர்களோ செல்வத்தை அதிகாரிகள் போல் மிரட்டி, செல்வத்திடம் இருந்த 8,50,000 ரூபாய் பணத்தைப் பறிக்க முயன்றுள்ளனர்.
ஆனால் சந்தேகித்த செல்வம், அக்கம் பக்கத்தினர் கேட்குமாறு சத்தம் போட்டு அழைத்து, அந்த இடத்திலேயே அவர்களை கையும் களவுமாக பிடித்து பெரியகுளம் வடகரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஆனால் கடைசியில் நடந்த ஆச்சரியம்தான் பிரம்மிக்க வைத்துள்லது. ஆம், இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிடிபட்ட 3 பேரில் பெரியகுளத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிருஷ்ணன் என்பவரும் அடக்கம். சொல்லப்போனால் அவர்தான் அந்த 3 பேர் கொண்ட குழுவுக்கே தலைவர்10 வருடத்துக்கு முன்னர் காவல்துறையிலிருந்து ஓய்வுபெற்ற இவர், அருண்குமார் மற்றும் வேல்மணி ஆகியோரின் துணையுடன் தொடர் வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
