'விடுதிக்கு சாப்பிடச் சென்ற மாணவர்'... 'சடலமாக மீட்கப்பட்ட அவலம்!'... 'பள்ளிக்கூடத்தில் பரபரப்பு'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 24, 2020 05:25 PM

தனியார் பள்ளி விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் மாணவர் ஒருவரின் சடலத்தைக் காவல் துறையினர் மீட்டெடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police investigates suspicious death of student in virudhunagar

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ளது, எஸ்.பி.கே மேல்நிலைப்பள்ளி. அதில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த கீழ் கன்னிச்சேரியைச் சேர்ந்த ஹரிஷ்பாபு என்ற மாணவர் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நேற்று மதியம் உணவு இடைவேளையில் விடுதிக்குச் சென்ற ஹரிஷ்பாபு வகுப்புக்குத் திரும்பவே இல்லை. பின்னர், அவருடைய விடுதி அறைக்குச் சென்று பார்த்தபோது, ஹரிஷ்பாபு தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, மாணவரின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, ஹரிஷ்பாபு அவ்வப்போது விடுதி சுவர் ஏறிக் குதித்து வெளியில் செல்வார் என்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவ்வாறு சென்றபோது ரோந்து காவலரிடம் சிக்கியதாகவும் பள்ளி தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆனால், ஹரிஷ்பாபுவின் பெற்றோர் பள்ளி தரப்பு விளக்கத்தை மறுத்து, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த சம்பவம் குறித்த விசாரணையை இரு தரப்பினரிடமும் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags : #SCHOOLSTUDENT #DEATH #POLICE