'சாலையில்' செல்லும் பெண்களிடம்... 'அநாகரீகமாக' நடப்பதே பொழுதுபோக்கு... பொடனியில் தட்டி ஜெயிலில் 'தூக்கிப்போட்ட' போலீஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 23, 2020 10:34 PM

சாலையில் செல்லும் பெண்களின் பின்புறத்தை தட்டி அவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Chennai Youth arrested by police for abusing ladies in road

சமீபத்தில் நங்கநல்லூர் பகுதியில் நடந்து சென்ற இளம்பெண்ணின் பின்புறத்தை பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் தட்டி அநாகரீகமாக நடந்து கொண்டார். அந்த பெண் கத்தி கூச்சல் போட அக்கம், பக்கத்தினர் வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மீண்டும் அதே பகுதியில் வேறு ஒரு பெண்ணிடம் அவ்வாறு நடந்து கொண்டபோது அப்பகுதியை சேர்ந்தவர்கள் மடக்கிப்பிடித்து அந்த வாலிபரை பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் சதீஷ் குமார்( 30) என்பதும் மடிப்பாக்கம் அடுத்த பெரியார் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் திருமணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நங்கநல்லூர், மடிப்பாக்கம் பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் இவ்வாறு நடந்து கொள்வதை சதீஷ் குமார் பொழுதுபோக்காக கொண்டிருந்திருக்கிறார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.