'தங்கச்சின்னு' கூட பாக்காம... +2 மாணவியை 'கர்ப்பமாக்கிய' அண்ணன்... 'அதிர்ந்து' போன பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிளஸ்-2 படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த முர்ஷித்(22) நீலகிரி மாவட்டம் பந்தலூர் கிராமத்தில் வசிக்கும் தன்னுடைய பெரியப்பா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது பெரியப்பா மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் வீட்டில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.
இந்த நிலையில் மாணவியின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர்.
அப்போது தனக்கு நடந்த கொடுமையை அவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளிக்க அவர்கள் விசாரணை நடத்தி முர்ஷித்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
