நண்பனை ‘சிறைக்கு’ அனுப்பிவிட்டு... ‘4 பேர்’ சேர்ந்து போட்ட ‘கொடூர’ திட்டம்... ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jan 23, 2020 05:03 PM

உத்தரபிரதேசத்தில் 4 பேர் சேர்ந்து நண்பனின் மனைவியை துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman GangRaped By Husbands Friends They Tried To Slit Her Throat

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மனைவி மீதான ஆசையால், அவருடைய நண்பர்கள் கொடூர திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளனர்.  அதன்படி, போதை பொருள் கடத்தியதாக பொய் புகாரில் நண்பனை சிக்க வைத்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

பின்னர் வீட்டில் தனியே இருந்த அவருடையை மனைவியை நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் அந்தப் பெண்ணைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது அந்தப் பெண் சத்தம்போட, வேறு வழியின்றி அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் செல்லும்போது இதுபற்றி யாரிடமாவது கூறினால் உன்னைக் கொன்றுவிடுவோம் என மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அதனால் பயந்துபோன அந்தப் பெண் 2 நாட்கள் கழித்தே போலீசாரிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த 4 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags : #UTTARPRADESH #CRIME #RAPE #FRIENDS #HUSBAND #WIFE