'கொரோனா பயத்தால்' பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை... உச்சகட்டமாக ஆண்டுத்தேர்வை 'ரத்து' செய்து... கோடை 'விடுமுறை' அறிவித்த பள்ளி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 09, 2020 11:00 PM

கொரோனா அச்சத்தால் பள்ளி ஒன்று ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து கோடை விடுமுறை அறிவித்துள்ளது.

Holiday declared for Bangalore schools from classes I to V

கொரோனா காரணமாக பெங்களூரில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளையும் நாளை மூடுமாறு கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை முதல் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டு என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கிழக்கு பெங்களூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்னும் பள்ளியொன்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து, கோடை விடுமுறையாக அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.  

கடைசியாக நடத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையில், மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அந்த பள்ளி அறிவித்துள்ளது. இதேபோல கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.