‘மிக்ஸர்’ வாங்கித்தரேன்னு கூட்டிட்டுப்போன மர்மநபர்.. 2ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூரில் 2ம் வகுப்பு மாணவி பள்ளி கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் பெரிய அல்லாபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியின் 8 வயது மகள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 17ம் தேதி மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கே வந்த மர்மநபர் ஒருவர் ‘மிக்ஸர்’ வாங்கித் தருவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் பள்ளி கழிவறையில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய சிறுமிக்கு கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் ரீதியலாக துன்புறுத்தப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று முறையிட்டுள்ளனர்.
இதனை அடுத்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சிறுமியை பாலியல் ரீதியலாக துன்புறுத்திய மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மிக்ஸர் வாங்கித் தருவதாக கூறி பள்ளி கழிவறையில் மர்மநபரால் 2ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News Credits: Vikatan
