VIDEO: ‘பட்டப்பகலில்’ வியாபாரியை ‘சரமாரியாக’ வெட்டிக்கொலை செய்த கும்பல்.. அதிரவைத்த சிசிடிவி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபட்டப்பகலில் சாலையின் நடுவே வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி பகுதியில் அம்ஜத் என்பவர் பர்னிச்சர் வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென சுற்றி வளைத்த மர்மகும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த அஜ்மத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அஜ்மத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகள் யார் என போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வியாபாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
