‘பள்ளியிலிருந்து திரும்பிய சிறுமிக்கு’... ‘வேன் ஓட்டுநருடன் சேர்ந்து 6 பேரால் நிகழ்ந்த கொடூரம்’... 'அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Mar 05, 2020 11:33 AM

மத்தியப் பிரதேசத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 year old Girl Gang Raped by School Van Driver and his Friends

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் ஷூஜல்பூர் டவுனில், கடந்த 28-ம் தேதி பள்ளி வேனில் 13 வயது மாணவி, மாலை 4.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வேன் ஓட்டுநர் அஜய் ஹாதி, வழக்கமாக செல்லும் வழியில் செல்லாமல், வேறு ஒரு பாதையில் செல்லவும், பயந்துபோன மாணவி இதுகுறித்து கேட்க, அவரை வேன் ஓட்டுநர் தாக்கியுள்ளார். பின்னர், ஆட்கள் நடமாட்டம் குறைந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அஜயின் நண்பர் அமித் என்பவர் கட்டிக் கொண்டிருந்த வீட்டில், ஏற்கனவே காத்திருந்த நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து மாணவியை வேன் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 5 மணிநேரம் கழித்து சிறுமி அங்கிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்துள்ளார். பின்னர் பெற்றோரிடம் கதறியபடியே கூற, மகளை காணாது தவித்த அவர்களுக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியடைய செய்தது.

பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்த போலீசார், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 7 பேரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.