‘அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கிறேன்’... ‘நம்பிச் சென்ற மருத்துவ மாணவிக்கு’... ‘அதிர்ச்சியளித்த மருத்துவ மாணவர்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Mar 05, 2020 05:36 PM

ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் முதுகலை பயின்று வந்த மருத்துவர், சக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அவரை துன்புறுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Doctor rapes Ayurveda college mate, films her in washroom

ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 25 வயதான தீபக் ராதே என்ற மருத்துவர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் முதுகலை பயின்று வந்துள்ளார். அப்போது அவருடன் அதே வகுப்பில் படித்து வந்த பெங்களூரைச் சேர்ந்த மருத்துவ மாணவியுடன் பழகி வந்துள்ளார். பின்னர் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தனியாக உன்னிடம் பேச வேண்டும் என்று கூறி, ஜெயாநகரில் உள்ள ஓட்டல் அறைக்கு அந்த மருத்துவ மாணவியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை எதிர்பாராத அந்தப் பெண் மருத்துவர் அதிர்ச்சியடைந்த நிலையில், ‘தனது பெற்றோரை சமாதானம் செய்து அடுத்த வருடம் திருமணம் செய்துக் கொள்கிறேன். அதுவரை நமக்குள் நடந்த விஷயங்களை வெளியில் யாரிடமும் கூற வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பி சென்ற மருத்துவ மாணவியை, அதன்பிறகு அவரிடம் பழகுவதை தீபக் ராதே தவிர்த்து வந்துள்ளார். மேலும், காதலை பிரேக் அப் செய்துகொண்ட தீபக், கடந்த 23-ம் தேதி மருத்துவ மாணவி கல்லூரியில் கழிப்பறைக்கு சென்ற போது பின் தொடர்ந்து சென்று தவறாக பிடிக்க முயற்சி செய்துள்ளார்.

பின்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை பரிசோதிக்க சென்றபோது, மருத்துவ மாணவியின் செல்ஃபோனை பறித்து, தன்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அழித்ததுடன், மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதாக மருத்துவ மாணவியை குற்றஞ்சாட்டி, தீபக் தாக்கி மிரட்டியுள்ளார். இதையடுத்து, பெங்களூர் காவல்நிலையத்தில் அந்த மருத்துவ மாணவி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இருவரும் ஓட்டல் அறையில் தங்கியது தெரியவந்ததால், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்த போலீசார் மருத்துவ மாணவர் தீபக்கை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Tags : #BENGALURU #SEXUALABUSE #DOCTORSPROTEST #AYURVEDA #HARYANA #DOCTOR