'நம்பி' எறக்கி விட்டதுக்கு... நல்லா வச்சு 'செஞ்சிட்டீங்க' ராசா... முன்னணி வீரரால் 'கடுப்பான' ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 03, 2020 12:15 AM

ரஞ்சி கோப்பைக்கான அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் பெங்கால் அணி கர்நாடக அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. கருண் நாயர், மணீஷ் பாண்டே, கே.எல்.ராகுல், கிருஷ்ணப்பா கவுதம் என முன்னணி வீரர்கள் பலர் இருந்ததால் கண்டிப்பாக இந்த போட்டியை அந்த அணி எளிதாக ஜெயிக்கும் என்றே ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் பெங்கால் வீரர்களின் அசத்தலான பந்துவீச்சில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 122 ரன்களுக்கு சுருண்டது. ரசிகர்களின் நம்பிக்கை 'காற்றிலிட்ட கற்பூரம் போல' கரைய ஆரம்பித்தது.

Ranji Trophy: KL Rahul falls for 0, twitter Reacts

தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி 312 ரன்கள் குவித்தது. இதையடுத்து 190 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் அணி தன்னுடைய 2-வது இன்னிங்சை தொடங்கியது. கர்நாடக அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 161 ரன்களுக்கு சுருண்டது. எனினும் அந்த அணி இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து  351 ரன்கள் எடுத்திருந்ததால் கர்நாடக அணிக்கு 352 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  இதையடுத்து களமிறங்கிய கர்நாடக அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள நிலையில் அந்த அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 254 ரன்கள் எடுக்க வேண்டியது இருக்கிறது.

இலக்கை எட்டி அரையிறுதியில் கர்நாடக அணி வெற்றி பெறுமா? என்பது நாளை தான் தெரியவரும். இதனால் இந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்காக எகிறியுள்ளது. இதற்கிடையில் பெங்கால் அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் 26 ரன்கள் எடுத்த நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல் 2-வது இன்னிங்சில் 2 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி வெளியேறினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டிகளில் ரன்கள் குவித்து அசத்திய ராகுல் ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து சமூக வலைதளங்களில் புலம்பி இதுகுறித்து அவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.