‘குழந்தைத் திருமணத்தை நிறுத்த’ 13 வயது சிறுமி செய்த பலே காரியம்!.. மாநில அரசு அளிக்கவிருக்கும் கவுரவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 04, 2020 06:40 PM

உத்தரப் பிரதேசத்தில் சிறார் திருமணத்தை தடுத்து நிறுத்திய 13 வயது சிறுமியை அம்மாநில முதல்வர் வரும் மார்ச்-8 ஆம் தேதி உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு கவுரவிக்க உள்ளார்.

13 yr old to be awarded for stopping child marriage

உத்தரப் பிரதேசத்தின் கார்க்குடா பகுதியில் 8-ஆம் வகுப்பு பயிலும் வன்ஷிகா கவுதம் என்கிற மாணவி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முன்னிலையில் லக்னோவில் நடக்கவுள்ள சர்வதேச மகளிர் தினத்தன்று நடக்கும் சிறப்பு கவுரவிப்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ள 20 பெண்களுள் ஒன்றானவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்குக் காரணம், ஒரு வருடத்துக்கு முன்பாக தனது ஊரில் தனது சொந்தக்காரர்களின் வட்டத்தில் 18 வயதுக்கு முன்னரே ஒரு சிறுமிக்கு நடக்கவிருந்த குழந்தைத் திருமணத்தை தனது குடும்பத்தாரின் உதவியுடன் சென்று தடுத்து நிறுத்தியதும், பள்ளி வயதுக் குழந்தைகளுக்கான கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி எடுத்துரைத்ததும்தான். அதன் பின் அச்சி்றுமியின் பெற்றோர்கள் வன்ஷிகா கவுதம் கூறியதை ஏற்று தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனர்.

மீனா மேன்ச் எனும் பெண்கள் சமூக இயக்கக் குழுவில் உறுப்பினராக இருக்கும் வன்ஷிகாவின் கல்வி சார்ந்த சமூக செயல்பாடுகளுக்கு வழங்கப்படும் இந்த கவுரவம் தங்களுக்கு பெருமிதம் அளிப்பதாக அவரைச் சார்ந்தோரும், அவரது ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : #SCHOOLSTUDENT #MARRIAGE #CHILD #WOMENSDAY2020