'500 கோடியில்' பிரமாண்டமான திருமணம்... 9 நாட்களுக்கு 'தடபுடல்' விருந்து... 'அசத்தும் அமைச்சர்' யாருன்னு பாருங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 02, 2020 05:24 PM

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்ரீராமுலு தன்னுடைய மகள் திருமணத்தை, சுமார் 500 கோடி ரூபாய் செலவில் நடத்தி வருவது தான் தற்போதைய அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக். இவரது மகள் ரக்ஷிதாவிற்கும், ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார் என்பவருக்கும் வருகின்ற மார்ச் மாதம் 5-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

Minister Sriramulu to hold multi-crore Wedding for Daughter

ரக்ஷிதா-ரவிக்குமார் திருமண ஏற்பாடுகள் கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி முதல் ஏக தடபுடலாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மெனு என கல்யாண விருந்து பயங்கரமாக களைகட்டி இருக்கிறதாம். திருமணம் பெங்களூரில் உள்ள பேலஸ் கிரவுண்டில் படு விமரிசையாக நடைபெற இருக்கிறது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு ஸ்ரீராமுலு பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால் அவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர சுமார் 1 லட்சம் விருந்தினர்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொள்வார்கள் என்பதால் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பிரபல கோயில்களின் மாதிரியில் பேலஸ் கிரவுண்டில் செட் அமைக்கப்பட்டு வருகிறது. திருமண மண்டபத்தில் பூ அலங்கார வேலைகளை செய்வதற்கு மட்டும் சுமார் 200 பேர் தீயாக வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.