‘நேர்ல உங்கள பாக்கணும்’... ‘திருமணத்திற்கு’ முன் போன் செய்த ‘இளம்பெண்’... நம்பிச் சென்ற ‘மாப்பிள்ளைக்கு’ நேர்ந்த பரிதாபம்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்!...
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவில் திருமணத்திற்கு முன் இளம்பெண் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெட்டதாபட்னா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவர் சாலையில் கத்தியால் குத்தப்பட்டு காயத்துடன் கிடந்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணையில் கத்தியால் குத்தப்பட்ட இளைஞருக்கும், பெட்டதபுரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் வரும் மார்ச் 13ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணத்தில் விருப்பமில்லாத அந்தப் பெண் தான் படிப்பைத் தொடர வேண்டும் எனவும், திருமணத்தை தள்ளி வைக்குமாறும் பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் பல்வேறு காரணங்களைக் கூறி பெண்ணின் பெற்றோர் அதற்கு சம்மதிக்காமல் இருந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தானே திருமணத்தை நிறுத்த முடிவு செய்த அந்தப் பெண், சம்பவத்தன்று தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட இளைஞருக்கு போன் செய்து நேரில் உங்களை சந்திக்க வேண்டுமெனக் கேட்டுள்ளார். பின்னர் இருவரும் சந்தித்தபோது, சற்றும் எதிர்பாராத விதமாக அவர் அந்த இளைஞரை கத்தியால் குத்தியுள்ளார். கல்லூரி படிப்பைத் தொடர்வதற்காக இளம்பெண் ஒருவர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
