மேட்டுப்பாளையத்தில் 'மர்மக்காய்ச்சலால்' திடீரென... 'உயிரிழந்த' 6 வயது சிறுமி... போலீசார் தீவிர விசாரணை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 06, 2020 03:30 PM

காய்ச்சலால் 6 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் மேட்டுப்பாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

School Student Dies near Coimbatore, Police Investigate

மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(48) இவரது மனைவி செல்வி(43). இவர்களுக்கு 6 வயதில் சஞ்சனா என்ற மகள் உள்ளார். சஞ்சனா அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சஞ்சனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதையடுத்து அவரது பெற்றோர் அவரை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை முடிந்து அவரை வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. தொடர்ந்து நேற்றிரவு சஞ்சனாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ந்து போன பெற்றோர் அவரை மீண்டும் அந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லை. இதனால் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சஞ்சனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் சஞ்சனா சாதாரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும்.