சாமி தரிசனம் முடிந்து வீடு திரும்பும்போது.. ‘நேருக்குநேர்’ மோதிய கார்கள்.. தமிழக ‘பக்தர்கள்’ 10 பேர் உடல் நசுங்கி பலி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கர்நாடகாவில் இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் தமிழக பக்தர்கள் 10 பேர் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலா கோவிலுக்கு ஓசூரை சேர்ந்த 10 பேர் காரில் சென்றுள்ளனர். சாமி தரிசனம் முடிந்து இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளனர். குனிக்கல் பகுதியில் கார் வந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு காரின் மீது நேருக்குநேர் மோதியுள்ளது.
இதில் காரில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 10 பக்தர்கள் உட்பட 13 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். சாமி தரிசனம் முடிந்து வீடு திரும்பும்போது சாலை விபத்தில் பக்தர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
