திருமணமான பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்த இளைஞர்.. கம்பத்தில் கட்டி உறவினர்கள் கொடுத்த கொடூர தண்டனை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகள்ளக்காதல் ஜோடியை கிராம மக்கள் கம்பத்தில் கட்டிவைத்து அடித்து, மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியா மாவட்டம் கந்த் பிப்ரா கிராமத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் 30 வயது பெண்ணுடன் தகாத உறைவில் இருந்துள்ளார். அப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அந்த இளைஞர் அப்பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அப்பெண்ணின் மாமனார் பார்த்துவிட்டார்.
உடனே கூடிய உறவினர்கள், இருவரையும் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர் ஆத்திரம் தீராத அவர்கள் இருவரின் மூக்கையும் அறுத்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அப்பெண்ணின் மாமனார் உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர். முறையற்ற உறவில் இருந்த இளைஞர் மற்றும் பெண்ணின் மூக்கை அறுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
