வீடு திரும்பாததால் ‘தேடி’ சென்ற தாய்... எதிரே ‘அலறியபடி’ ஓடிவந்த ‘10 வயது’ மகன்... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 10 வயது சிறுவனை முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்துக் கடத்திய நபரைப் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆவடி காமராஜ் நகரைச் சேர்ந்த தம்பதி ஹரி - சுமதி. இவர்களுடைய மகன் ராகுல் (10) 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பள்ளி முடிந்து டியூஷனுக்குச் சென்ற ராகுல் வீடு திரும்ப தாமதமாகியுள்ளது. இதனால் பதறிப்போன அவருடைய தாய் டியூஷன் மையத்திற்குச் சென்று பார்க்கக் கிளம்பியுள்ளார்.
அப்போது வழியில் எதிரே அலறியபடி ஓடிவந்த ராகுல் தாயைக் கட்டிப்பிடித்து அழுதுள்ளார். யாரோ மர்ம நபர் தன்னை மயக்க ஸ்பிரே அடித்துக் கடத்தியதாகவும், அவரிடமிருந்து தப்பித்து ஓடிவந்ததாகவும் ராகுல் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுமதி மற்றும் அவருடைய உறவினர்கள் சிலர் ராகுல் கூறிய இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு ஒரு மர்ம நபர் இருந்துள்ளார். இதையடுத்து அவர்கள் அந்த நபரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க, அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
