“தங்கள் ஆசையை நிறைவேற்ற.. காதல் ஜோடி செய்த கொடூரம்!”.. “இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்”!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 29, 2020 09:58 AM

தங்களுடைய திருமண ஆசையை சிக்கலின்றி நிறைவேறுவதற்காக வேண்டி காதல் ஜோடி ஒன்று இளம் பெண்ணொருவரை படுகொலை செய்து எரித்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

couple kills young girl and burnt her corpse for their love

நொய்டாவில் உள்ள மொபைல் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்த, சார்ச்சா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பூனம். இந்த இளம்பெண் கடந்த 26-ஆம் தேதி கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.இந்த படுகொலையை அடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலிசார் விசாரணை செய்தபோது இப்பெண்ணுடன் பணியாற்றிய புலந்த்சாஹர் பகுதியை சேர்ந்த கபில் என்கிற இளைஞரும், ரூபி ஷர்மா என்கிற இளம் பெண்ணும் சிக்கினர்.

இவர்களை விசாரித்தபோது தங்களுடைய காதலுக்கு ரூபி வீட்டில் எதிர்ப்பு கிளம்பிதாகவும், இதனால் கபில், பூனம் என்கிற அந்த இளம் பெண்ணை காதலிப்பது போல் நடித்து மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்து எரித்து, அதன் அருகில் ரூபியின் உடைகள் மற்றும் அணிகலன்கள் உள்ளிட்டவற்றை வைத்து நாடகம் ஆடி ரூபி வீட்டினரை ஏமாற்றியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

தங்களுடைய காதலை நிறைவேற்றுவதற்காக சம்மந்தமில்லாத அப்பாவி பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ள இந்த காதல் ஜோடியின் கொடூரச்செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #UTTARPRADESH