‘காதலை’ முறித்துக்கொண்ட ‘அக்கா’... வாட்ஸ்அப்பில் வந்த ‘புகைப்படம்’... தங்கைக்கு ‘ஷாக்’ கொடுத்த ‘கோவை’ இளைஞர்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலைத் துண்டித்த காதலியைப் பழிவாங்க அவருடைய தங்கைக்கு ஆபாசப்படம் அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபன் (29). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் ரூபனின் நடவடிக்கையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அந்தப் பெண் அவருடனான காதலை முறித்துக்கொண்டுள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த ரூபன் காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதை அந்தப் பெண் பொருட்படுத்தாமல் இருந்ததால், ரூபன் அவருடைய தங்கைக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆபாசப் படங்களைப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரூபனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
