தொடர்ந்து ‘வற்புறுத்தி’ வந்த ‘பெற்றோர்’... மருத்துவமனையிலேயே ‘டாக்டர்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 30, 2020 11:14 AM

திருச்சி தனியார் மருத்துவமனையில் மயக்க ஊசி போட்டு மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trichy Doctor Commits Suicide In Hospital Over Marriage Issue

அரியலூரைச் சேர்ந்த சரவணன் (33) என்பவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவராக வேலை செய்துவந்துள்ளார். சரவணன் திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லாமல் இருந்துவந்த நிலையில், அவருடைய பெற்றோர் தொடர்ந்து திருமணம் செய்துகொள்ளுமாறு அவரை வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த சரவணன் 4வது தளத்திலுள்ள ஒரு அறைக்குச் சென்று தனக்குத் தானே கையில் மயக்க ஊசி போட்டுக்கொண்டுள்ளார். அளவுக்கு அதிகமாக மயக்க மருத்தை உடலில் செலுத்தியதால் அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அவர் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சரவணனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #CRIME #SUICIDEATTEMPT #TRICHY #DOCTOR #HOSPITAL #MARRIAGE