‘மெத்தைக்கு அடியில் வீசிய துர்நாற்றம்’.. ‘சடலமாக கிடந்த குழந்தை’.. மாயமான மனைவி மீது கணவன் பரபரப்பு புகார்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 28, 2020 12:35 PM

குழந்தையை கொலை செய்துவிட்டு காதலனுடன் மனைவி சென்றுவிட்டதாக கணவர் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mother kills child found the body in bed box in Chandigarh

சண்டிகர் மாநிலம் புரெயில் கிராமத்தை சேர்ந்தவர் தஷ்ரத் குமார். எலெக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் இவருக்கு, ரூபா என்பவருடன் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 25ம் தேதி வேலை முடிந்து தஷ்ரத் குமார் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லை. இதனால் பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். இந்த நிலையில் இரண்டு நாள்கள் கழித்து படுக்கையறையில் உள்ள கட்டில் மெத்தைக்கு அடியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் உடனே மெத்தையை தூக்கிப் பார்த்துள்ளார். அப்போது தனது குழந்தை வாயில் துணியால் கட்டப்பட்டு சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனை அடுத்து காவல் நிலையம் சென்ற தர்ஷத், குழந்தையை கொலை செய்துவிட்டு காதலனுடன் மனைவி தலைமறைவாகிவிட்டதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். முன்னதாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கணவருடன் ரூபா விருப்பமில்லாமல் வாழ்ந்ததாகவும், கடந்த 2019-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்ததும் தெரியவந்துள்ளது.

News Credits: Hindustan Times, OutlookIndia

Tags : #CRIME #MURDER #POLICE #MOTHER #CHILD #AFFAIR