"கணவன் வருவது கூட அறியாமல்"... "செல்போனில் மூழ்கிக்கிடந்த மனைவி!"... "ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்!"...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 29, 2020 06:19 PM

சமூக வலைதளங்களை அதிக நேரம் பயன்படுத்திய மனைவியை கணவர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

husband stabs wife for spending too much time in social media

ஈரோடு அருகே கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், சர்புதீன். அவருக்கு ஜான்ஜெனக் என்ற மனைவியும், 12 வயதில் மகளும் உள்ளனர். இல்லத்தரசியான ஜான்ஜெனக் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துபவர். இதைத் தொடர்ந்து, அவர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் மூகநூல் மூலம் நட்பாகிப் பேசி வந்துள்ளார்.

இந்த செய்தி சர்புதீனுக்குத் தெரிய வந்ததும், ஃபேஸ்புக் மூலம் ஆண்களுடன் பேச வேண்டாம் என ஜான்ஜெனக்கை எச்சரித்துள்ளார். ஆனால், அந்த இளைஞருடன் நட்பில் தொடர்ந்து இருந்துவந்துள்ளார், ஜான்ஜெனக்.

இந்நிலையில், சர்புதீன் வேலைமுடிந்து வீட்டுக்கு திரும்பியபோது, அவர் வருவதைக் கூட அறியாமல், ஜான்ஜெனக் செல்போனில் மூழ்கிக் கிடந்துள்ளார். அதனால், சர்புதீனுக்கும் அவர் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சர்புதீன், கத்தியை எடுத்து, ஜான்ஜெனக்கின் கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் மிதந்த ஜான்ஜெனக்கை மீட்டு, அக்கம்பக்கத்தினர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கத்தியால் குத்திய சர்புதீனை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், ஜான்ஜெனக்கிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : #CRIME #HUSBANDANDWIFE #MOBILE