‘திருமணமான’ இரண்டே ஆண்டுகளில்... ‘கணவர்’ இல்லாத நேரத்தில் நேர்ந்த ‘பரிதாபம்’... ‘சோகத்தை’ ஏற்படுத்திய சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 28, 2020 07:03 PM

புதுக்கோட்டையில் திருமணமான இரண்டே ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pudukkottai Woman Commits Suicide After 2 Years Of Marriage

கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேவிபட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும், சேலத்தைச் சேர்ந்த ராமு என்ற இளம்பெண்ணிற்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் வசித்துவந்த அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனிவாசன் வெளியே சென்ற நேரத்தில் ராமு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுபற்றி அருகிலிருப்பவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து சென்று ராமுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சீனிவாசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #CRIME #SUICIDEATTEMPT #MARRIAGE #HUSBAND #WIFE #PUDUKKOTTAI