‘கொய்யாப்பழம் வாங்கி தர மறுத்த 6ம் வகுப்பு மாணவன்’.. ஆத்திரத்தில் நண்பர்கள் செய்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொய்யாப்பழம் வாங்கித்தர மறுத்த மாணவனை சகமாணவர்கள் அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஃபர்மான் குரேஷி என்ற மாணவர் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளி இடைவேளை நேரத்தில் கொய்யாப்பழம் வாங்கி சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவருடன் வந்த அவரது நண்பர்கள், தங்களுக்கும் கொய்யாப்பழம் வாங்கித்தர கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு குரேஷி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரத்திரமடைந்த மாணவர்கள் மறுநாள் குரோஷி பள்ளிக்கு வரும்போது வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக மாணவர் குரோஷி உயிரிழந்தார். இதனை அடுத்து குரோஷியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக சக பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சிறுவன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும்’ என தெரிவித்துள்ளனர்.
