'சிங்கம்' படத்தின் 'அஜய் தேவ்கானே' அசந்து போகும் 'ஆக் ஷன் போஸில்...' '2 கார்களுக்கு நடுவே பயணித்த நிஜ போலீஸ்...' ''கடுப்பான ஐ.ஜி.-யின் ரியாக்ஷன்...'
முகப்பு > செய்திகள் > இந்தியா‘சிங்கம்’ பட பாணியில் 2 கார்களுக்கு நடுவே நின்றபடி பயணித்து வீரசாகசம் செய்த போலீஸ் அதிகாரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தின் தமோ நகரில் நரசிங்கார் காவல் நிலையத்தில் மனோஜ் யாதவ் என்பவர் துணை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தியில் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான சிங்கம் பட காட்சியால் ஈர்க்கப்பட்ட இவர், தன்னையும் ஒரு ஹீரோவாக நினைத்து கொண்டு, காவலர் சீருடையுடன் பணியில் இருந்தபோது 2 கார்களுக்கு நடுவே நின்றபடி பயணித்து வீரசாகசம் செய்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த காட்சிகள் வைரலாக பரவியதையடுத்து,மேலதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ள ஐ.ஜி. அனில் உத்தரவிட்டார். இவை இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டியாக அமைந்து விடும் என கூறி மனோஜுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. வருங்காலத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
