தூங்கப்போன 'அண்ணன' இன்னும் காணோம்... தேடிப்போன தங்கைக்கு காத்திருந்த 'கொடூர' அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 07, 2020 11:24 PM

வீட்டு மாடியில் தூங்கிய வாலிபர் கழுத்தறுபட்டு கிடந்த சம்பவம் சேலம் பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Car Driver Murdered in Salem District, Police Investigate

சேலம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் மாறன்(29). கார் டிரைவரான இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜெபினா என்ற ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜெபினா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் சென்று விட்டார். இதையடுத்து அபிஷேக் மாறன் தனது பாட்டி கண்ணம்மா மற்றும் தங்கை அபிநயாவுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சாப்பிட்டு விட்டு நேற்று இரவு மொட்டை மாடிக்கு அபிஷேக் தூங்க சென்றிருக்கிறார். காலையில் அபிநயா மொட்டை மாடிக்கு சென்றிருக்கிறார். அங்கு கழுத்தறுபட்டு பிணமாக கிடந்த அண்ணனை பார்த்து அபிநயா அலற அவரது சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அபிஷேக் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அதை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார் இதற்காக 4 தனிப்படைகளை அமைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.