'கொரோனாவுக்கு மருந்து' கண்டுபிடித்ததாகக் கூறிய தமிழக 'சித்த' வைத்தியர் 'திருத்தணிகாசலம்' சென்னையில் 'கைது'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா குறித்து வதந்தியை பரப்பியதாக தமிழகத்தைச் சேர்ந்த பிரபல சித்த வைத்தியர் திருத்தணிகாலசத்தின் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி வந்த சித்த வைத்தியர் திருத்தணிகாசலம் தனது சமூக வலைதளங்கள் மூலம் வதந்தியை பரப்பி வருவதாகவும், அவர் போலி மருத்துவர் என்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர், சென்னை காவல்துறையிடம் புகாரளித்திருந்தது. மேலும் அவர் மருத்துவராக பணியாற்ற தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றத்தில் எவ்வித சான்றிதழையும் பெறவில்லை, அவர் போலி மருத்துவர் என்றும் தமிழ்நாடு சித்தமருத்துவ மன்றம் குற்றம் சாட்டியிருந்தது.
இந்த நிலையில், இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று சென்னையில் சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தை கைது செய்துள்ளனர். இவரை வரும் 20-ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
