என் பையன 'என்கவுண்டர்' பண்ண 'திட்டம்' போடுறாங்க... காசியின் 'தந்தை' பரபரப்பு குற்றச்சாட்டு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணம் பறித்தது, அவர்களை மிரட்டியது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக நாகர்கோயிலை சேர்ந்த என்ஜினியர் சுஜியை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுஜி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் தற்போது ஏரளாமானோர் அவர்மீது புகார் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை கோவை, பெங்களூர் போன்ற இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் சுஜியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
இந்த நிலையில் சுஜியின் தந்தை தங்கபாண்டியன் தனது மகனை என்கவுண்டரில் கொலை செய்ய போலீசார் திட்டமிட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தங்கபாண்டியனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
