'யானை' தாக்கி 'உயிரிழந்தவரின்' சடலத்தை.. 'கொரோனா' அச்சத்தால் 'உறவினரே' வாங்க மறுத்த 'அவலம்'.. காவலர்கள் எடுத்த முடிவு!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவில் யானை தாக்கி உயிரிழந்தவரின் உடலை அவரது குடும்பத்தினரே கொரோனா அச்சம் காரணமாக வாங்க மறுத்த சோகம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம், மைசூருக்கு அருகே உள்ளது சாமராஜ நகர்ப்பகுதி. இங்கு வாழ்ந்த 44 வயதான நபர் ஒருவரை அப்பகுதியில் யானை ஒன்று கடுமையாக தாக்கியது. இதனால் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் அவரது பிரேதத்தை பிரேத பரிசோதனை செய்து முடித்த பின்னர் காவல் துறையினர் அவரது பிரேதத்தை அந்த நபரின் உறவினரிடம் ஒப்படைக்கச் சென்றனர்.
ஆனால் பெருகி வரும் கொரோனா அச்சம், தம் உறவினரின் பிரேத உடலையே சந்தேகிக்கப்பட வேண்டிய நிர்க்கதிக்கு தள்ளியுள்ளது. ஆம், யானை தாக்கி உயிரிழந்த அந்த நபரின் பிரேதத்தை அவரது உறவினர்கள் கொரோனா அச்சம் காரணமாக பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இறந்தவரின் உடலை யாரும் வாங்க முன்வராத நிலையில் இறந்தவரின் உடலை வாங்கிய மேடகவுடா துணை காவல் ஆய்வாளர் இரண்டு காவலர்களின் துணையோடு முறைப்படி சடங்கு, சம்பிரதாயங்கள் செய்து அடக்கம் செய்தார்.