‘பிளேபாய்’ சுஜியின் வழக்கில் அதிரடி திருப்பம்.. போலீஸில் சிக்கிய முக்கிய கூட்டாளி..! வெளியான திடுக்கிடும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 07, 2020 03:39 PM

பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதான சுஜியின் நண்பர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Nagercoil engineer Suji\'s friend arrested by police

சென்னை பெண் மருத்துவரை காதலிப்பதாக ஏமாற்றி பணம் பறித்து அவரது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வழக்கில் காசி என்ற இன்ஜினீயர் சுஜியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மூன்று நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அவர் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள பெண்களை காதல் வலையில் வீழ்த்தி நெருக்கமாக புகைப்படம் எடுத்து மிரட்டியது தெரியவந்துள்ளது. சுஜியால் ஏமாற்றப்பட்ட பெண்கள் தற்போது புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.

மேலும் சுஜியிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரது இந்த மோசடிக்கு சிலர் உதவி செய்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக இணையதளங்களில் பெண்களின் ஆபாச புகைப்படங்ளை, வீடியோக்களை பதிவேற்றம் செய்ய இரண்டு நபர்கள் உதவி செய்தது தெரியவந்துள்ளது. அதில் முக்கிய நபரான நாகர்கோவிலை சேர்ந்த டேசன் ஜினோ (19) என்ற சுஜியின் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், ‘காசி என்ற சுஜியின் நண்பர்கள் சிலர் லொக்கேஷன் ஷேரிங் மூலம் இணைப்பில் இருந்துள்ளனர். அவர்கள் எங்கு இருந்தாலும் மற்ற நண்பர்களுக்கு தெரியும் அளவுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். சுஜி ஜிம்முக்கு போகும்போது கோவையில் படிக்கும் பெண் ஒருவரும் ஜிம்முக்கு சென்றுள்ளார். அதில் அவர்களுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த அந்த பெண் கோவை சென்றபோது சுஜியும் கோவையில் இருப்பதாக லொக்கேஷன் காட்டியிருக்கிறது. இதுபோன்று லொக்கேஷன் ஷேரிங்கில் இருந்த நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

சென்னை மருத்துவரின் புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிட்ட டேசன் ஜினோவை கைது செய்திருக்கிறோம். சுஜியால் ஏமாற்றப்படும் பெண்களுக்கு அவரைப் பற்றிய உண்மைகள் தெரிய வரும்போது விலக தொடங்குவார்கள். அப்போது அவர்கள் சுஜியின் பேஸ்புக் நட்பு வட்டத்திலிருந்தும் விலகிவிடுவார்கள். உடனே அந்த பெண்களுடன் நெருக்காமாக இருக்கும் புகைப்படங்களை டேசன் ஜினோவுக்கு அனுப்புவார் சுஜி. டேசன் ஜினோ அந்த புகைப்படங்களை சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்புவார்.

அந்த பெண் உடனே டேசன் ஜினோவை தொடர்பு கொண்டு இந்த படங்கள் உனக்கு எப்படி கிடைந்த என பதறியபடி கேட்பார். அப்போது சுஜி சொல்வதுபோல் கேட்காமல் இருந்தால், உனக்கு தனியாக அனுப்பிய படங்களை பேஸ்புக்கில் அனைவரும் பார்க்கும்படி போட்டுவிடுவேன் என மிரட்டுவார். இப்படி பல பெண்களை மிரட்டியுள்ளனர்’ என போலீசார் தெரிவித்துள்ளனர்.