ரெண்டு 'கொழந்தைங்கள' வச்சுக்கிட்டு இப்டியா பண்ணுவ?... ஆத்திரத்தில் 'தங்கையை' கொலை செய்து... 'தலைமறைவான' அண்ணன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 10, 2020 11:43 PM

இரண்டு குழந்தைகளின் தாயை சொந்த அண்ணன் கொலை செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Brother Killed his own Sister in Madurai, Police Investigate

மதுரை மாவட்டம் கீழப்பட்டியை சேர்ந்த மோகன் மனைவி சகுந்தலா. இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் 2 குழந்தைகள் இருக்கின்றனர். கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சகுந்தலா கணவரை விட்டு பிரிந்து அம்மா வீட்டில் வசித்து வந்தார்.

இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் சகுந்தலாவிற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை சகுந்தலாவின், அண்ணன் சவுந்தர பாண்டியன் கண்டித்து இருக்கிறார். இந்த நிலையில் நேற்று அண்ணன்-தங்கை இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சகுந்தலாவை, சவுந்தர பாண்டியன் கொலை செய்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த மதுரை போலீசார் சகுந்தலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தலைமறைவான அண்ணன் சவுந்தர பாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்.