'கேம்' விளையாடிய போது... கீழே விழுந்து 'உடைந்து' போன மொபைல்... புது மணப்பெண் எடுத்த 'விபரீத' முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 07, 2020 08:06 PM

திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Newly Married Woman Suicide in Krishnagiri District

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி கனிமொழி(19). 8 மாதங்களுக்கு முன் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சம்பவ தினத்தன்று கனிமொழி அதே பகுதியை சேர்ந்த ரமீலா என்பவரது மொபைலை வாங்கி கேம் விளையாடி இருக்கிறார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மொபைல் கீழே விழுந்து உடைந்து விட்டது. இதில் கனிமொழி-ரமீலா இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் விஷம் குடித்து விட்டனர். இதையறிந்த அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு காவேரிபட்டணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ரமீலா பிழைத்துக்கொள்ள கனிமொழி நிலை கவலைக்கிடமானது. தொடர்ந்து கனிமொழி தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் கனிமொழியை காப்பாற்ற முடியவில்லை. அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.