பணத்தின் மீது கிருமி நாசினி தெளிப்பு!.. போலீசாரின் நூதன செயலால்... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!.. பதறவைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | May 10, 2020 05:52 PM

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள மத்திய பிரதேச போலீசார் நூதன வழிமுறையை கையாள்கின்றனர்.

mp traffic police sanitizes fine amounts using disinfectants

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் போலீஸ்காரர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஆகியோரின் பணி இன்றியமையாததாக உள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் விதிமுறைகளை மீறி வாகனத்தில் சுற்றுபவர்களை தடுத்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து அதற்கான கட்டணத்தையும் வசூலித்து வருகிறார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் தென்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனால் யாருக்கு கொரோனா இருக்கிறது, கொரோனா இல்லை என்பதை கண்டுபிடிப்பது மிகக்கடினமாக உள்ளது.

மேலும், போலீசார் அதிக அளவில் இந்த நோயால் தாக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத்திற்கான ரசீது கொடுத்து பணம் வாங்கும் போலீஸ்காரர்கள், வாகன ஓட்டிகள் கொடுக்கும் பணத்தின் மீது கிருமி நாசினி தெளித்து, ஒரு கவரில் போடச் சொல்கிறார்கள். அதன்பின் அந்த பணத்தை எடுக்கிறார்கள்.

தொற்றில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இந்த நூதன முறையை கையாள்கின்றனர்.