'குறும்படத்தில்' நடித்த 12-ஆம் வகுப்பு 'மாணவி'!.. உடலில் காயங்களுடன் 'சடலமாக' மீட்கப்பட்ட 'கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவரின் சடலம் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

திரூவாரூர் மாவட்டம் மகிழஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி செந்தில்குமார். செந்தில்குமாருக்கு ஒரு மகளும் மகனும் உள்ள நிலையில், மூத்த மகளான மௌனிகா 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வெழுதிவிட்டு, விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார். மாணவி மௌனிகா, முந்தைய நாள் இரவு பாட்டி வீட்டில் உறங்கச் செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மௌனிகாவை கழுத்து உள்ளிட்ட உடற்பகுதிகளில் காயங்களுடன் சடலமாகக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர். இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில், மாணவியின் பெற்றொருக்கும் உறவினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதுபற்றி அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நன்னிலம் காவல்துறையினர், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்ததோடு, இந்த மரணம் கொலையா? என்பது பற்றிய முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்த மௌனிகா குறும்படத்தில் நடித்துள்ளார் என்பதும் அந்த குறும்படம் யூடியூபில் வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.
