'இன்ஸ்டாகிராம்' பழக்கம்... வீட்டிற்கு வெளியே கிடந்த 'செருப்பு'... 'பொள்ளாச்சி' இளைஞர் கொலையில் புதிய திருப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 10, 2020 10:14 PM

16 வயது சிறுமியுடன் தனியாக பேசிக்கொண்டிருந்த இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Youth Murdered Near Pollachi, Police arrested 3 persons

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த கவுதம் என்பவர் கடந்த 7-ம் தேதி தனது 16 வயது தோழி ஒருவருடன் தனிமையில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது சிறுமியின் குடும்பத்தினர் வீடு திரும்பியுள்ளனர். வீட்டில் இருந்த கவுதமை பார்த்த குடும்பத்தினர் ஆத்திரத்தில் அவரை சரமாரியாக தாக்கினர்.

இதில் காயமடைந்த கவுதம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் மூவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கவுதம் கொலை குறித்த புதிய தகவலை காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

அதில் கவுதமுக்கும், 16 வயது சிறுமிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று கவுதம் சிறுமியின் வீட்டிற்கு சென்று தனிமையில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது வெளியே சென்று வீடு திரும்பிய சிறுமியின் உறவினர்கள் வீட்டிற்கு வெளியே கவுதமின் செருப்பை பார்த்து சந்தேகம் அடைந்துள்ளனர். வீட்டிற்குள் சென்று தேடியபோது கவுதம் கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்து இருக்கிறார். அதைப்பார்த்த உறவினர்கள் ஆத்திரத்தில் அவரை அடித்துள்ளனர்.