2 குழந்தைகளின் தாயுடன் 'கள்ளக்காதல்'... இரவில் வீடு புகுந்து 'கணவர்' கண்முன்னே... மனைவியை 'கொலை' செய்த இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 11, 2020 12:22 AM

கள்ளக்காதலால் இளம்பெண்ணை கொலை செய்து இளைஞரும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

Beauty Parlor Women Murdered Near Tirupur, Police Investigate

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (37). இவரது மனைவி சங்கீதா(33). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. சங்கீதா பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த விவேக்(28) என்பவரிடம் சங்கீதா வட்டிக்கு பணம் வாங்கியிருக்கிறார். இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக உருமாறியுள்ளது. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று விவேக் சங்கீதா வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு 10.30 மணியளவில் சங்கீதா வீட்டிற்கு சென்ற அவர் யுவராஜை வெளியில் தள்ளிவிட்டு, குழந்தைகளை ஒரு அறையில் போட்டு பூட்டினார். தொடர்ந்து சங்கீதாவிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டிருக்கிறார்.

அதற்கு சங்கீதா மறுக்கவே அவரின் வாயில் மாத்திரைகளை திணித்து சம்பவ இடத்திலேயே அவரை கொலை செய்திருக்கிறார். மேலும் தானும் மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். யுவராஜும் ஜன்னல் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துள்ளார். ஆனால் அவரின் மனைவி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.