'கொரோனா டூட்டிக்கு போன இளம் காவலர்'... 'சாலையில் திரும்பும்போது கண்முன்னே வந்த பயங்கரம்'... சென்னையில் நடந்த கோரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பணிக்காக செல்லும் போது டேங்கர் லாரி மோதியதில், இளம் பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயுதப்படையை சேர்ந்த பெண் காவலர் பவித்ரா. 22 வயதான இவருக்கு, நந்தனத்தில் இன்று பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர், பாரதி சாலையில் இருந்து மெரினா கடற்கரைக்கு திரும்பினார். அப்போது எதிரே டேங்கர் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அது தன்னை மோத போகிறது என பவித்ரா சுதாரிப்பதற்குள், அவர் மீது வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் லாரியின் சக்கரத்திற்குள் சிக்கி கொண்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேகமாக வந்த டேங்கர் லாரி ஓட்டுனரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 22 வயதே ஆன இளம் காவலர் உயிரிழந்துள்ள சம்பவம் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
