'தப்பு செஞ்சுட்டேன் அம்மா'... வீட்டை எதிர்த்து 'காதல்' திருமணம் செய்த... 'கல்லூரி' மாணவி தற்கொலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 12, 2020 02:06 AM

காதல் திருமணம் செய்த 10 மாதங்களில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Newly Married Woman Suicide Near Salem, Police Investigate

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். லாரி ஓட்டுநரான இவருக்கும், குகை பகுதியை சேர்ந்த லீசா என்ற கல்லூரி மாணவிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காதல் மலர்ந்தது. இவர்கள் காதலுக்கு லீசா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 10 மாதங்களுக்கு முன் லீசா வீட்டைவிட்டு வெளியேறி ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடிதம் எழுதி வைத்துவிட்டு லீசா சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தன்னுடைய தாய்க்கு எழுதிய கடிதத்தில் தான் தவறு செய்து விட்டதாக தெரிவித்து இருக்கிறார். ராஜ்குமார் மீது அடிதடி வழக்குகள் இருப்பதால் அவரிடம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.