'மியூசிக் வீடியோவுல நடிக்கணுமா?'.. 'ஆசை வார்த்தைகள் கூறி'... 22 வயது இளம் பெண்ணை 'கடத்தி', பெண் உட்பட 7 பேர் செய்த 'கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 27, 2019 05:23 PM

22 வயது பெண்ணை கடத்தி நரைபலி கொடுக்க முயற்சித்த 7 பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

girl abducted for human sacrifice on pretext of acting chance

பீகாரில் காத்மண்டு என்கிற இடத்தில் இருந்து ஜாக்பானி என்கிற இடத்துக்கு 22 வயது பெண்ணை கடத்திக்கொண்டு சென்று நரைபலி கொடுக்க முயன்ற கும்பலை போலீஸார் விரைந்து சென்று பிடித்து, உடனடியாக கைது செய்துள்ளனர்.

ஒரு பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்ட இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட 22 வயது பெண்ணிடம், மாடலிங் ஆக்குவதாகவும், அடுத்து உருவாக்கப்படவுள்ள வீடியோ ஆல்பத்தில் ஹீரோயினாக நடிக்க வைப்பதாகவும் ஆசை வார்த்தைகளைக் கூறி, அழைத்துச் சென்று நரைபலி கொடுக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், அவர்களிடம் இருந்து பூஜை சாமான்கள், 7 ஏடிஎம் கார்டுகள், 1 லட்சத்து 9 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் செக் புக் உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டதோடு, இளம் பெண்ணையும் மீட்டனர். மேற்கொண்டு விசாரித்தும் வருகின்றனர்.

Tags : #GIRL