‘வயிற்று வலினு போன சிறுமிக்கு’... ‘டாக்டர்கள் கூறிய காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ச்சியான பெற்றோர்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 01, 2020 12:52 PM

வயிற்றுவலி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 12 வயது சிறுமி, கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

12 year old girl pregnant after sexual abused by someone

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சில நாட்களாக வயிற்றுவலி இருந்தது. இதனால் அந்த சிறுமியின் பெற்றோர் அங்குள்ள மருத்துவமனைக்கு, சிறுமியை அழைத்துச் சென்றனர்.  அங்கு சாதாரண வயிற்று வலிக்கு மருத்துவம் பார்க்கப்பட்டதால், வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் அந்த சிறுமி கடந்த செவ்வாய்கிழமை அன்று மாலை, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். 

அப்போது சிறுமியின் வயிறு லேசாக வீங்கி இருந்ததால், சந்தேகமடைந்த மருத்துவர்கள் சிறுமிக்கு பரிசோதனை செய்து பார்த்தனர். அதில், அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதும், அதனால் அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 12 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனை மற்றும் சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், 12 வயது சிறுமி கர்ப்பம் அடைந்ததால், வயிற்றில் வளரும் குழந்தையால் அந்த சிறுமிக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுமா என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் சிறுமிக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து சட்டரீதியாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Tags : #PREGNANT #CHILD #GIRL