ஒவ்வொரு ‘பாகமாக’ செயலிழந்த பரிதாபம்.. ‘இந்த நிலமை யாருக்கும் வரக்கூடாது’... ‘தீரா’ சோகத்திலும் ‘பெற்றோர்’ செய்த காரியம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Jan 10, 2020 12:50 PM
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 2 வயது குழந்தையின் உடலை அவருடைய பெற்றோர் ஆராய்ச்சிக்காக வழங்கியுள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாத்னம் சிங் சாப்ரா. இவருடைய 2 வயது மகளான ஆசீஸ் கவுர் சாப்ரா பிறந்ததில் இருந்து அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். தொடர் சிகிச்சைகள் அளித்து எவ்வளவோ முயற்சித்தும் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. அரிய வகை நோயால் குழந்தையின் உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக செயலிழந்து குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் உடலை அவருடைய பெற்றோர் ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர். இதுகுறித்துப் பேசியுள்ள சாத்னம் சிங், “எங்களுடைய குழந்தையின் உடலை மருத்துவமனை ஆராய்ச்சிக்காக கொடுத்துள்ளோம். அவளைப் போல வேறு எந்த குழந்தையும் பாதிக்கப்படக்கூடாது. எங்களுடைய குழந்தையின் உடல் மூலம் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, மற்ற குழந்தைகளின் நோய்களுக்கு தீர்வு கிடைக்க உதவட்டும். அவளுடைய கண்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
